Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விஷால் _ ஆர்.கே. செல்வமணி மோதல்! நாளை முதல் ஷூட்டிங் ரத்து!

On July 31, 2017
thani-oruvan-movie
Share
thani-oruvan-movie தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் இடையே பல வருடங்களாக தொழிலாளர்களின் சம்பள உயர்வு சம்பந்தமாக பிரச்னை இருந்து வருகிறது. சமீபத்தில் 'பில்லா பாண்டி' படப்பிடிப்பின் போது பெப்சி தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பிரச்னை ஏற்ப்பட்டது. அதில் இரண்டு நாட்கள் முழுமையாக 'பில்லா பாண்டி' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதன் எதிரொலியாக தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கும், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, ‘ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி சம்பளத்தை தராவிட்டால் ஆகஸ்ட் 1_ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்’ என பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்தார். rk பெப்சி அமைப்பின் இந்த முடிவால் நாளை முதல் படப்பிடிப்புகள் ரத்தாகும் சூழல் ஏற்ப்பட்டுள்ளது! பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் நிலைமை சீராகலாம். என ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.