சென்னையில் இன்று மழை பெய்யுமா?

குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
நேற்று முன்தினம் மேற்கு திசைக்காற்றில் ஏற்பட்ட வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. தற்போது வட கடலோர ஆந்திரா முதல் குமரிக்கடல் பகுதி வரை காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை ராயல்சீமா மற்றும் உள் தமிழகம் வழியாக கடந்து செல்கிறது. அதேபோல், உள் கர்நாடகா முதல் குமரிக்கடல் பகுதி வரை மேலடுக்கு சுழற்சி ஒன்றும் ஏற்பட்டு இருக்கிறது.
இதன் தாக்கம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.
சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
