விஷாலுக்கு எதிராக களம் இறங்கும் விஜய்யின் அப்பா.

விஷால் அணி சரத்குமார் அணியுடன் ஏற்பட்ட மோதலில் நடிகர் சங்கத் தேர்தலில் களம் இறங்கியது. மீடியாக்களின் வெளிச்சத்தில் உலகமே வேடிக்கை பார்க்க விஷால் அணி நடிகர் சங்கத் தேர்தலில் ஜெயித்தது.
கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக இப்போது தான் நிறைவேற்றி வருகிறது விஷால் அணி. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தை பற்றி ஒரு பேட்டியில் பேசியதால் சங்கத்தோடு சண்டை வந்தது. சங்கத்திலிருந்தே ஒதுக்கி வைக்கப்பட்டார் விஷால்.
திருட்டு விசிடி, தயாரிப்பாளர்கள் பிரச்சனைகளை சங்கம் சரியாக கையாளவில்லை என விஷால் தலைமையில் புகார் தெரிவித்தது.
தயாரிப்பாளர் தேர்தல் கூடிய விரைவில் நடக்க உள்ளது. விஷால் அணி தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றுவோம் என களம் இறங்கிவிட்டார்கள். தலைவர் இடத்திற்கு விஷாலே போட்டியிடுகிறார்.
தற்போதைய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு இந்த முறை போட்டிக்கு வரவில்லையென விலகிக்கொண்ட நிலையில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமியில் ஒரு கூட்டணி விஷால் அணிக்கு எதிராக களம் இறங்கியுள்ளது.
முன்பு எதிரெதிர் அணியில் இருந்த கேயார், எஸ்.ஏ.சி அணி ஒன்றாகியுள்ளது. இதில் அஜித்தின் தயார்ப்பாளர் ஏ.எம்.ரத்னம், ஏ.எல்.அழகப்பன் ஆகியோரும் இணைந்து விஷால் அணிக்கு எதிராக வலுவாக களம் இறங்கியுள்ளது.
தயார்ப்பாளர்கள் நாங்கள் ஒற்றுமையாகி விட்டோம். நடிகர்கள் போட்டிக்கு வரலாம். ஆனால் அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் கஷ்டங்கள் பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் ஏற்கனவே ஒரு சங்கத்தில் பொறுப்பில் இருக்கிறார்கள் அதை ராஜினாமா செய்து விட்டு வந்து நிற்கட்டும். சங்கப் பிரச்சனைகள் வந்தால் யார்ப்பக்கம் நிற்பார்கள்? எனக் கேள்வி எழுப்புகிறார் எஸ்.ஏ.சி.
பிஸி பிரபல நடிகர்கள் ஒரு பக்கமும் பழம் தின்று கொட்டை போட்ட தயாரிப்பாளர்கள் ஒரு பக்கமாக போட்டிகளம் பரபரப்பாகியிருக்கிறது. இனி தினமும் வேடிக்கை காத்திருக்கிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postமுப்பரிமாணம் - விமர்சனம்
