அஜித்குமாரின் படத்தை புறக்கணிக்கும்! பிரபல கன்னட நடிகர்...

தமிழில் சூப்பர் ஹிட்டாக ஓடிய " என்னை அறிந்தால் " திரை படம் கன்னடத்தில் மொழி பெயர்த்து இன்று கன்னட திரையரங்குகளில் வெளியிடப்பட இருந்த நிலையில். கன்னடத்தில் பிரபல நடிகரான ஜக்கேஷ் அஜித்குமார் நடித்த " என்னை அறிந்தால் " திரைப்படத்தை கன்னடத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டால் திரையரங்குகளை தீ வைத்து கொழுத்திவிடுவேன் என்ற கூறியுள்ளார்.
இந்த படம் கௌதம் வச்தேவன் இயக்கதில் அஜித்குமாரின் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் கன்னடத்தில் மொழி பெயர்த்து வெளியிடப்டயிருந்தது.பின்னர் படத்தின் பெயரும் கன்னடத்தில் "சத்தியதேவ்" ஐ. பி . எஸ். மாற்றப்பட்டுள்ளது.இருந்தும் இந்த வெளியீட்டிற்கு கன்னட திரையுலகினர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.வேற்று மொழி படங்கள் கன்னடத்தில் டப் செய்யப்பட்டால்,கன்னட திரைப்படங்களின் வசூலில் பாதிப்பு ஏற்படும் என கன்னட திரையுலகினர் கூறுகின்றனர்.இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவை சந்தித்து அவர்கள் கோரிக்கை மனுவையும் அளித்துள்ளனர்.
இந்நிலையில் கன்னட நடிகரான ஜக்கேஷ் என்பவர்,என்னை அறிந்தால் திரைப்படத்தை டப் செய்து வெளியிட உள்ள கர்நாடக தியேட்டர்களை தீயிட்டு கொழுத்துவேன் எனவும் அதற்காக சிறைக்கு செல்ல தான் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக வாட்டாள் நாகராஜ் தலைமையில் வரும் மார்ச் 11-ஆம் தேதி பேரணிக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
இதுபோன்ற தமிழ் திரையுலக பிரபலத்தின் படத்தை திரையிட்டால் திரையரங்குகளை கொளுத்துவேன் என்று சொன்ன கன்னட நடிகர் மீது கன்னட திரைத்துறை நடவடிக்கை எடுக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்..Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
