விஷப்பாம்புகள் மதவாதிகளாக மாறிவிடக்கூடாது விஜய் : துறை வைகோ.

தென்காசி மாவட்ட சங்கரன்கோவில் அருகே உள்ள முள்ளிகுளம் கிராமத்தில் அரசு பள்ளியில் புதிய கட்டிட திறப்பு விழாவிற்கு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துறை வைகோ கட்டடத்தை திறந்து வைத்த பின்பு செய்தியாளர்கள் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, அரசியலைப் பொறுத்த வரையில் இது கடினமான உலகம் சகோதரர் விஜய். அவர் அரசியல் என்கிற நச்சுப் பாம்பை கையில் எடுத்திருக்கிறேன் என்று சொல்கிறார்.அந்த விஷப் பாம்புகள் மதவாத சக்திகளாக தமிழகத்தில் வேரூன்றி விடக்கூடாது. அதன் வளர்ச்சிக்கு நேரிடையாகவோ மறைமுகமாகவோ அதற்கு நாம் துணை போகிவிடக்கூடாது என்பதே சகோதரர் விஜய்க்கு எனது வேண்டுகோள்.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.சமத்துவம் சமூக நீதி பெரியார் கொள்கைகள் பற்றி அவர் பேசியது சந்தோஷம். அவர் கூறியபடி அரசியல் பயணம் அமைய வேண்டும்.
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சிறப்பான ஆட்சியை செய்து கொண்டிருக்கிறார்.சில குறைகள் இருக்கும், நிதி பற்றாக்குறையின் காரணமாக குறைகள் வருகிறது அது ஒன்றிய அரசின் மோடி அரசுதான் காரணம்.
சில நேரங்களில் தலைவர் வைகோ அறிவுரை கூறுகிறார். தோழமை இயக்கத் தலைவர்கள் கருத்துக்களை ஏற்று தவறுகள் நடக்காதவாறு இனி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது ஒரு அரசியல் ரேஸ் ..எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சியாக இருந்தாலும் வலுவாக இருக்க வேண்டும் அதுதான் ஜனநாயகத்திற்கு நல்லது என பேசினார்.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.சமத்துவம் சமூக நீதி பெரியார் கொள்கைகள் பற்றி அவர் பேசியது சந்தோஷம். அவர் கூறியபடி அரசியல் பயணம் அமைய வேண்டும்.
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சிறப்பான ஆட்சியை செய்து கொண்டிருக்கிறார்.சில குறைகள் இருக்கும், நிதி பற்றாக்குறையின் காரணமாக குறைகள் வருகிறது அது ஒன்றிய அரசின் மோடி அரசுதான் காரணம்.
சில நேரங்களில் தலைவர் வைகோ அறிவுரை கூறுகிறார். தோழமை இயக்கத் தலைவர்கள் கருத்துக்களை ஏற்று தவறுகள் நடக்காதவாறு இனி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது ஒரு அரசியல் ரேஸ் ..எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சியாக இருந்தாலும் வலுவாக இருக்க வேண்டும் அதுதான் ஜனநாயகத்திற்கு நல்லது என பேசினார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.