Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சுமார் 45,000 உயிர்களை காவு வாங்கிய இஸ்ரேல் பாலஸ்தீன போர்!

On November 16, 2024
WhatsApp Image 2024-11-16 at 19.57.49
Share
இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே கடந்த 13 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் தெற்கு இஸ்ரேல் பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே போர் தொடங்கியது. இந்தத் தாக்குதலில், இஸ்ரேல் மக்கள் 1,206 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம், ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் ஒருங்கிணைந்து தாக்குதல் நடத்தத் திட்டமிடுவதாகக் கூறி இஸ்ரேல் வடக்கு காஸா பகுதியில் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 13 மாதங்களில் 43,799 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,03,601 பேர் காயமடைந்ததாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35 பேர் கொல்லப்பட்டதாகவும் ஹமாஸ் அமைப்பினர் ஆளும் காஸா பகுதியின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.