Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விரைவில் வெளியாகவுள்ளது "நாடோடிகள் 2"..!

On January 24, 2019
main1
Share

2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது .

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில்,  சமுத்திரகனி இயக்கத்தில்    "நாடோடிகள் – 2 " உருவாகி வருகிறது.  இதில் சசிகுமார் - அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும்   பரணி,சமுத்திரகனி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர்,நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

திரைக்கதை எழுதி இயக்குகிறார்  - சமுத்திரகனி.

விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. படமும் விரைவில் வெளிவர இருக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.