Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வாக்களியுங்கள், வலிமைமிக்க இந்தியாவை உருவாக்க உதவுங்கள் - கமல்ஹாசன்..!

On January 25, 2019
2_08203_16228
Share
வலிமைமிக்க இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் உதவுங்கள் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் ட்வீட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், இளம் மனதில் எப்போதும் ஒரு ஆசை பட்டியல் உள்ளது. அதில், வாக்களிக்க வேண்டிய அவசியத்தை மிக உயர்ந்த இடத்தில் வைக்க வேண்டும். என் நண்பர்கள் பலர் மோசமாக இருந்தனர். அவர்கள் வாக்களிக்கவில்லை என்பதால் தான், இப்போது நாம் விளைவுகளை அனுபவிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், வாக்களிக்கும் உரிமை நமது விதியை வடிவமைக்கிறது. ஆகவே, பொறுப்புடன் நாட்டின் சுதந்திரத்தை வடிவமைக்க தொடங்குவோம். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தங்களை இளைஞர்கள் இணைத்து கொண்டால், வலிமைமிக்க இந்தியாவை உருவாக்குவதற்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.