விரைவில் அதிமுக பொதுக்குழு- சசி நீக்கம்!

அதிமுகவின் அணிகள் இணைப்பில் விறுவிறுவென முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ஓபிஎஸ் அணி முன்வைத்த கோரிக்கை முதல்வர் தற்போது நிறை வேற்றிக்கொண்டுள்ளார்.
சசிகலாவின் நியமனத்தை ரத்து செய்ய விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டப்படும் என கூறப்படுகிறது.
பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினால் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட அதிமுக பெயர், இரட்டை இலை சின்னம் இயல்பாகவே திரும்ப இரு அணிகளுக்கும் கிடைத்துவிடும்.
பொதுக்குழு- சசி நீக்கம்:-
இந்நிலையில் சசிகலா தரப்புக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்து அதிமுக பொதுக்குழுவை கூட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்பொது குழு கூட்டத்தில் பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என கூறப்படுகிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை, போயஸ் கார்டன் பங்களா நினைவு இல்லம் ஆகியவற்றைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கும் அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
