இலங்கை கடற்படையின் தளபதியாகும் தமிழர் !

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியல் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் மைத்திரிபால சிறிசேனாவால் சற்று முன்னர் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கடற்படையின் தற்போது தளபதியாகப் பதவி வகிக்கும் வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை புலிகளுக்கு எதிரான போருக்கு பின்னர், 21வது கடற்படை தளபதியாக தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1982 ல் கடற்படையில் சேர்ந்த சின்னையா, இங்கிலாந்து கடற்படை கல்லூரியில் பயிற்சி பெற்றுள்ளார். கிழக்கு கடல் பிராந்தியத்தில் கமாண்டராக பணிபுரிந்துள்ளார். அவர் போரின் போது சிறப்பாக பணிபுரிந்ததற்காக பல விருது பெற்றுள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
