Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வழிவிடு...வழிவிடு...நான் விளக்கம் தருகிறேன் தங்க தமிழ்ச்செல்வன்!

On August 30, 2017
thangatamil-selvan998
Share
thangatamil-selvan998 முதல்வர் பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்து விட்டு, புதுச்சேரி சொகுசு ரிசார்ட்டில் கடந்த ஒரு வாரமாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் இருந்து வருகின்றனர். புதுச்சேரியில் இருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்யும் நோட்டீஸ் அனுப்பியும், அங்கிருந்தவாரே தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள் பேட்டி அளித்தனர். இந்நிலையில், புதுச்சேரி ரிசார்ட்டில் இருந்து ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ., தங்கதமிழ்ச்செல்வன், நிலக்கோட்டை எம்.எல்.ஏ., ஏழுமலை ஆகிய இருவரும் அங்கிருந்து சென்னை புறப்பட்டுள்ளனர். இவர்கள் சபாநாயகர் தனபாலை சந்தித்து, தங்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது விளக்கம் அளிக்க உள்ளனர். புதுச்சேரியில் இருந்து நேரடியாக தலைமை செயலகம் செல்ல உள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக் கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அளித்த கோரிக்கையை கவர்னர் நிராகரித்து விட்டதால், அது தொடர்பாக சபாநாயகர் தனபாலிடம் தங்க தமிழ்ச்செல்வன் முறையிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், தினகரனை நேரில் சந்தித்து பேசுவதற்காகவே தங்க தமிழ்ச்செல்வன் சென்னை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.