Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தமிழர்களின் நலனுக்காக வாழ்ந்து மறைந்த ஒரு மாவீரன் கதையில் நடிக்கும் பிரபல தெலுங்கு நடிகர் மகன்!

On August 30, 2017
naan
Share
naan பத்மஜா பிலிம்ஸ் தயாரிப்பில் மோகன்பாபு மகன் மனோஜ் மஞ்சு தெலுங்கில் நடித்துள்ள படம் ‘ஒக்கடு மிகிலாடு’. mohanbabu1_3121297f நாயகியாக அனிஷா அம்புரோஸ் நடிக்கிறார். சுஹாசினி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இது இலங்கை தமிழர்களுக்காக வாழ்ந்த போராளியின் கதை. 1990 மற்றும் 2017 கால கட்டங்களில் நடக்கும் கதையாக உருவாகி இருக்கிறது. manoj ஜி.கே.ராமராஜு ஒளிப்பதிவு செய்கிறார். சிவா நந்திகம் இசை அமைக்கிறார். அஜய் ஆண்ட்ரூஸ் இயக்குகிறார். இந்த படம் தமிழில் ‘நான் திரும்ப வருவேன்’ என்ற பெயரில் வெளிவருகிறது. “ இந்த படம் தமிழர்களின் நலனுக்காக வாழ்ந்து மறைந்த ஒரு மாவீரன் கதை. இதில் நான் நடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த படத்துக்காக அடர்ந்த காடுகள், மலை, கடலில் ஆபத்தான சில காட்சிகளை பட மாக்கினோம். இவ்வளவு சிரமப்பட்டு நடிக்க வேண்டுமா? என்றார்கள். அப்போது, ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மாவீரன் கதையில் நடிக்க எந்த ஆபத்தையும் சந்திக்க தயார், என்றேன். தமிழ் மொழி, தமிழ் மக்கள் எங்கள் உணர்வோடு கலந்தவர்கள். எனவே, இந்த படத்தில் விரும்பி நடித்தேன்” என்றார். இதன் படப்பிடிப்பு இலங்கையில் நடந்தது. இந்த படத்தின் தமிழ் வசனம், பாடல்களை சுரேஷ் ஜித்தன் எழுதி இருக்கிறார். இந்த படம் அடுத்த மாதம் ஆந்திராவில் வெளிவருகிறது. அப்போது தமிழிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.