Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

லீவு விட்ட ஐடி கம்பெனி: தல படம்!

On March 24, 2017
katamarayudu_mania_company_declares_holiday
Share
katamarayudu_mania_company_declares_holiday டோலிவுட் ’பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது கட்டமராயுடு படம். தமிழில் ’தல’ அஜித் நடித்த ’வீரம்’ படத்தின் தெலுங்கு ரீமேக் தான் இந்த படம். இப்படத்தை டோலி இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள், டிரைலர் யூடியூப்பில் வெளியாகி செம ஹிட் அடித்தது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸை ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கியிருந்தனர். ஆந்திராவைச் சேர்ந்த ஐடி நிறுவனம் ஒன்று கட்டமராயுடு பட ரிலீசுக்காக விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் அதற்கு பதிலாக அவர்கள் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வேலை செய்ய வேண்டும் என அறிவிப்பில் தெர்விக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டிக்கெட்டுகள் முதல் மூன்று நாட்களுக்கு விற்று தீர்ந்துவிட்டது. பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை ஷ்ருதிஹாசன் நடித்துள்ளார். இப்படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு உள்ள்து.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.