Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

லிப் லாக் காட்சியெல்லாம் சாதாரண வி‌ஷயம்: ஆன்ட்ரியா

On October 12, 2017
Siddharth-Aval-Tamil-Movie-Stills-1-750x506
Share
 , மிலண்ட் ராவ் இயக்கத்தில் சித்தார்த் – ஆன்ட்ரியா நடிப்பில் உருவாகி இருக்கும் `அவள்’ படத்தில் இடம்பெற்ற முத்தக்காட்சி குறித்து நடிகை ஆன்ட்ரியா விளக்கம் அளித்துள்ளார். Siddharth-Aval-Tamil-Movie-Stills-1-750x506 `ஜில் ஜங் ஜக்’ படத்திற்கு பிறகு சித்தார்த் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் `அவள்’. மணிரத்னத்தினம் உதவி இயக்குநராக பணியாற்றிய மிலண்ட் ராவ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சித்தார்த் ஜோடியாக ஆண்ட்ரியா ஜெரோமியா நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் வருகிற நவம்பர் 3-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழில் `அவள்’ என்ற பெயரிலும், தெலுங்கில் `கிருஹம்’ என்ற பெயரிலும், இந்தியில் `தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்’ என்ற பெயரிலும் இப்படம் வெளியாகிறது. வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் சித்தார்த்தின் ஏடாகி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் சித்தார்த் – ஆன்ட்ரியா இருவரும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடும் காட்சிகள் ட்ரைலரில் இடம்பெற்றிருந்தது. இது பற்றி கூறிய ஆன்ட்ரியா, “இப்போது திரைப்படங்கள் யதார்த்த வாழ்க்கையை காட்டுகின்றன. நிஜ வாழ்க்கையிலும், சினிமாவிலும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுவது சாதாரண வி‌ஷயம். அதை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என்று தெரியவில்லை” என்றார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.