ரூ.2 கோடிக்கு விற்பனையான தல அஜித் பட பாடல்...

அஜித் குமார், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலரின் நடிப்பில், சிவா எழுதி இயக்கியுள்ள படம் விவேகம். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து, தற்போது இறுதிக்கட்ட தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்களை சோனி மியூசிக் நிறுவனம் ரூ.2 கோடிக்கு வாங்கியுள்ளது. இது சமீப கால தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான சாதனையாகும். எந்த படத்தின் பாடலும் இந்த அளவுக்கு விற்பனை செய்யப்பட்டதில்லை.
ஆகஸ்ட் மாதம் இந்த படம் ரிலீசாக உள்ள நிலையில், பெரும் வசூலை வாரி குவிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. விவேகம் படத்தின் டீசர் இதுவரை 1.50 கோடிக்கும் அதிகமானோர் பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
