தலைக்கு இணையான ரோலில் நடிக்கும் விவேக் ஒபுராய்

சிறுத்தை சிவா இயக்கத்தில்த் உருவாகியுள்ள படம் விவேகம். இப்படத்தில் அஜித்திற்கு இணையான வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஒபுராய் நடித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது 3வது முறையாக அஜித்துடன் இணைந்து இயக்குனர் சிவா உருவாக்கியுள்ள படம்.
இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.படத்தில் அனிருத் இசையமைத்து இருக்கிறார்.
பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுக்கும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
படப்பிடிப்பின் போதே, அஜித்தின் ஒவ்வொரு புகைப்படங்களாக வெளியிடப்பட்டு ரிசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுருக்கிறது. இதில், அஜித்துடன் இணைந்து நடித்த விவேக் ஒபுராய் படத்தில் தனது பங்களிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனத்திற்கு பேட்டியளித்த விவேக் ஒபுராய், படப்பிடிப்பு தளத்தில் அஜித்தின் செயல்களைக் கண்டு தான் மெய்மறந்ததாக குறிப்பிட்டுள்ளார். அஜித் ஒரு தனித்துவமான மனிதர் என்றும் செய்யும் தொழிலில் கச்சிதமானவர் என்றும் தெரிவித்துள்ளார். இந்த படத்தில், அனைவரும் தன்னை வில்லன், நெகட்டிவ் ரோல் என்று தன்னை எண்ணுவதாகும் தெரிவித்த விவேக் ஒபுராய், தான் அஜித்திற்கு இணையான வேடத்தில் நடித்திருப்பதாக தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடம் இன்னும் எதிர்பார்ப்பை எர்ப்படுத்தியுள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
