ரவீந்திர ஜடேஜாவுக்கு விளையாட தடை!

கொழும்பு டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ரவீந்திர ஜடேஜா கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று இலங்கை அணி ஃபாலோ ஆன் ஆடி வந்த நிலையில் ஜடேஜா பந்தை எடுத்து இலங்கை வீரர் மலிந்தா புஷ்பகுமாரா மீது “அபாயகரமான முறையில்’ வீசியதாக புகார் எழுந்தது. இவ்வாறு புகார் அளித்தவர்கள் கள நடுவர்களான ராட் டக்கர் மற்றும் புரூஸ் ஆக்சன்போர்ட். இது ஐசிசி நடத்தை விதிமுறை 2.2.8-ன் படி முறையற்ற தண்டனைக்குரிய செயலாகும்.
விசாரணையில் தவறை ஜடேஜா ஒப்புக் கொண்டார் இதனையடுத்து டேவ் ரிச்சர்ட்ஸன் ஜடேஜா அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை விதித்தார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
