போட்டில வந்தாலும் ஹிட்டடிப்போம் உதயநிதி நம்பிக்கை !

உதயநிதியின் புதிய படத்தின் பெயர், முரட்டுகாளையில் இடம்பெற்ற பாடல் வரியான, பொதுவாக என் மனசு தங்கம். தளபதி பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிற ‘விஐபி 2’, ‘தரமணி’ படங்கள் ரிலீஸாகும் போது ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படமும் ரேஸில் நிற்கிறது. ‘‘எப்படி இந்த துணிச்சல்?’ உதயநிதியிடம் கேட்டால், ‘‘எல்லாம் கதைமேல உள்ள நம்பிக்கைதாங்க. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மற்றும் 'ரஜினி முருகன்'படங்களை இயக்கின பொன்.ராம் சாரோடு பணியாற்றியவர் தளபதி. திறமைசாலி. அதனால, அந்தப் படங்களுக்கு என்ன வரவேற்பு கிடைச்சுதோ அதே மாதிரி 'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தையும் மக்கள் கொண்டாடுவாங்கனு நம்பறேன்!” என்கிறார் உற்சாகமாய்!
இந்தப் படத்தில் உதயநிதி முதன்முறையாகக் கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார். படத்தில் சூரியின் கேரக்டர் பெயர் ‘டைகர் பாண்டி’யாம்! சூரியின் காமெடி ஒரு பக்கம் என்றால் 'ஊத்துக்காட்டான்' என்ற கதாபாத்திரத்தில் பார்த்திபனும் படத்தில் இருக்கிறார். அப்புறமென்ன... பெரிய காமெடி டிரிட் காத்திருக்கிறது என்று நம்புவோம்!Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postரவீந்திர ஜடேஜாவுக்கு விளையாட தடை!
