Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ரஜினி பட தலைப்பில் நடிக்கும் சிபிராஜ்...

On August 30, 2019
IMG_20190902_154456
Share

பழமொழிகள் பல உள்ளன, அவை அனைத்தும் ஏதாவது ஒரு காரியத்திற்கு ஒப்பிட்டு பார்க்கப்பட்டு. 'முதல் அபிப்ராயமே சிறந்த அபிப்ராயம்' எனும் பழமொழி எளிமையானதென்றாலும், பல துறைகளுக்கும் பொருந்தும் ஒரு சிறந்த பழமொழியாகும். ஒரு சினிமாவை பொறுத்தவரை இந்த பழமொழி இன்னும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது.

ஒரு திரைப்படத்திற்கு முதல் அபிப்ராயமாக விளங்குவது அதன் டீசர் தான். ஒரு ரசிகன் படத்திலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதை மிகச்சரியாக எடுத்துக் கூறுவதாக, ரசிகனை திரைக்கு இழுக்கும் உத்தியாக, படத்தின் அடிப்படையை விளக்குவதாக அமைவது படத்தின் டீசர் தான். அந்த வகையில் மிகச் சிறந்த ஒரு டீசராக அமைந்திருக்கிறது சமீபத்தில் வெளியான நடிகர் சிபிராஜின் “ரங்கா” படத்தின் டீஸர்.

60 நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய “ரங்கா” படத்தின் டீஸர் ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் விமர்சகர்களையும், பிரபலங்களையும் ஒரு சேரக் கவர்ந்து பாராட்டுகளை பெற்றுள்ளது.

“பாஸ் மூவிஸ்” தயாரிப்பாளர் விஜய் கே செல்லைய்யா டீஸர் பற்றி கூறியது...
“இதனை நாங்கள் ஒரு மிகச் சிறப்பான தொடக்கமாக கருதுகிறோம். டீஸர் பார்த்துவிட்டு சினிமா நண்பர்கள் தந்த பாராட்டு இன்னும் உத்வேகத்தை அளிக்கக் கூடியதாக உள்ளது. அனைத்து பாராட்டும் இயக்குநர் DL வினோத் அவர்களுக்குரியது. இப்படத்தில் அவரது உழைப்பானது, திரைக்கதையிலிருந்து படத்தை உருவாக்கியது வரையிலும், மிகச் சிறப்பானது மேலும் இப்போது டீஸரை அவர் அளித்த விதம் அபாரமானது.

மேலும் இப்படத்தில் ரூபன் அவர்களின் எடிட்டிங்கும், ராம்ஜீவனின் பின்னணி இசையும், அர்வியின் அபாராமான காட்சியமைப்பும் மிகச் சிறப்பாக அழுத்தமாக கதையையும், கதாப்பாதிரங்களையும் எடுத்துக்காட்டியுள்ளது. இத்தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு என்னை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இனி வெளியாகப்போகும் டிரெய்லரில் இவர்கள் செய்யப்போகும் அதிசயங்களுக்காக காத்திருக்கிறேன்” என்றார் படத்தின் தயாரிப்பாளர் விஜய் கே செல்லைய்யா.

நாயகனாக சிபிராஜும் நாயகியாக நிகிலா விமலும் நடித்துள்ளார்கள். சதீஷ், மோஹ்னீஸ் ரஹீஹா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்தின் வெற்றிப்படமாக 'ரங்கா' படத்தை நியாபகப்படுத்தும் விதமாக இப்படத்திற்கு 'ரங்கா' என இப்படத்திற்கு இயக்குனர் பெயரிட்டுள்ளனர்.
பாடல்களை தாமரை, விவேக், முன்னா சௌஹத் அலி எழுத, படத்தின் இசையை ராம்ஜீவன் அமைத்துள்ளார். அர்வி ஒளிப்பகிதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பை செய்துள்ளார். சூப்பர் சுப்பராயன் அவர்களின் மகன்களான திலீப் சுப்பராயன் மற்றும் தினேஷ் சுப்பராயன் இப்படத்திற்கு சண்டை காட்சிகள் அமைத்துள்ளனர். DL வினோத் இப்படத்தை எழுதி இயக்குகியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.