Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

காதல் தோல்வியா! உதவி செய்ய இருக்கிறார் இந்த நடிகர்!!

On August 31, 2019
IMG_20190902_160759
Share
தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் படம் தான் "நானும் சிங்கள் தான்" என்ற ரோமேண்டிக் காதல் மற்றும் காமேடி கலந்த படம். இந்த திரைப்படத்தை இயக்குகிறார், புது முக இயக்குனர் ரா.கோபி. கதா நாயகனாக அட்டகத்தி தினேஷ், கதா நாயகியாக தீப்த்தி ஷெட்டி நடித்துள்ளனர். இதில் மொட்ட ராஜேந்திரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து காமடியில் கலக்கியுள்ளாராம். இவர் இதுவரைக்கும் வில்லனாக, காமிடியனாக நடித்து இருந்தாலும், இதில் இவர் ஒரு ரோமேண்டிக் காமிடியனாக வருகிறார். லண்டன் வாழ் தமிழனாக FM ஸ்டேஷ்சனில் ஆர்.ஜே வாக தனது கதாபாத்திரத்தில் கலக்கி உள்ளாராம் மொட்டை ராஜேந்திரன். MR. LOVE என்ற பெயரில் காதலர்களுக்கு டிப்ஸ் கொடுத்து உதவும் லண்டன் லவ் குரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் மொட்டை ராஜேந்திரன். காதலை சேர்த்து வைப்பறக்கு, காதலில் தோல்வி அடைந்து, விரக்தியில் உடையகிவர்களுக்கு, முகிகயமாக சிங்கிளாக இருப்பவர்களை மிங்கிளாக மாற்ற ஐடியாக்களை கொடுக்கும் MR.LOVE என்ற கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறாம். தினேஷ்வுடன் சேர்ந்து காமெடியில் பட்டைய கிளப்பி, வெளுத்து வாங்கி இருக்கிறார். தமிழ் சினிமாவில் தன் குரலுக்கு என ஒரு ரசிகர்கள் கூட்டம் கொண்டவர், ஒரு RJ'வாக பார்ப்பது புதிதாக இருக்கும் என படக்குழுவினர் கூறுகின்றனர்.. கட்டயாமாக நமது 90’ஸ் சிங்களுடன், 60’ஸ் சிங்களின் ஆட்டம் வெகுவாக நம்மை கவரபோகிறது! என படக்குழுவினர் சொல்கின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.