ரசிகர்களுக்கு கமல் கட்டளை. சுவரொட்டிகள் எதுவும் ஒட்ட வேண்டாம்.

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. வரும் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் அவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இரண்டாவது நாளாக நடிகர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் அவர் பேசினார். அப்போது ரசிகர்களை சந்திப்பது வழக்கமானது என்றாலும் தற்போது இலக்கு மாறியுள்ளது என்றார்.
கஜானாவை நோக்கி நாம் செல்லவில்லை என்ற அவர், மக்களின் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்றார். நமது பயணம் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
மேலும் ரசிகர்கள் பிதற்றலாக சுவரொட்டிகள் ஒட்ட வேண்டாம் என்றும் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
