Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

முஸ்லிம்கள் சென்று வழிபடும் சிவன் கோவில் !

On August 1, 2017
temple
Share
temple உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வரான, யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ராம்பூரில் உள்ள பாதாளேஷ்வர் சிவன் கோவிலுக்கு, ஹிந்துக்கள் மட்டுமல்லாது, முஸ்லிம் மக்களும் வந்து பூஜை செய்து, பிரசாதம் பெற்றுச் செல்கின்றனர். இது குறித்து, கோவில் பூசாரி, நரேஷ் குமார் சர்மா கூறியதாவது:- தரிசு நிலமாக இருந்த இந்த இடத்தில், 1788ல், சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதைய நவாப், அகமது அலி கான், ஹிந்து பண்டிதர்களை அழைத்து, கோவில் கட்ட ஏற்பாடு செய்தார், 1822ல், கோவில் கட்டி முடிக்கப்பட்டது. முஸ்லிம் மக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள இந்த சிவன் கோவிலுக்கு, அப்பகுதியில் வசிப்பவர்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வசிக்கும் முஸ்லிம்களும் வந்து, பக்தி சிரத்தையுடன் பூஜை செய்து, பிரசாதத்தை பெற்றுச் செல்வதாக கூறப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.