Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மும்பையில் இருந்து பூரிப்புடன் சென்னை வந்த ரஜினி...

On June 8, 2017
rajini2
Share
rajini2 10 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி தன் ரசிகர்களை கடந்த மே மாதம் சந்தித்து புகைப்படம் எடுத்துகொண்டார். இந்த சந்திப்பின் போது அவர் தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசினார். ரஜினியின் அரசியல் குறித்த அறிவிப்பை பலரும் ஆதரித்தும், எதிர்த்தும் விமர்சித்தனர். ரஜினி புதிய கட்சி தொடங்கவிருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு ஜூலை 15 அல்லது ஆகஸ்ட் 15 ல் வெளியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்பு காலா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பிற்காக மும்பை சென்ற ரஜினி. நேற்றுடன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இன்று சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய ரஜினிகாந்த் அவர்கள் முகத்தில் பூரிப்பும், பொலிவும் தெரிந்தது. இதற்கு காரணம் இயக்குனர் ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகும் காலா படத்தின் கதையம்சம் அவருக்கு மிகவும் பிடித்துள்ளதின் பிரதிபலிப்பு தெரிகிறது. விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் முதற்கட்ட படப்பிடிப்பு நல்லமுறையில் நிறைவடந்ததாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் 24 ஆம் தேதி மும்பையில் மீண்டும் துவங்குவதாகவும் தெரிவித்தார். இன்னும் இரண்டு மாதங்களில் அடுத்த கட்ட மாவட்ட ரசிகர்களை சந்திக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.