Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

முதல்வர் இன்று வெளியிடும் - எம்.ஜி.ஆரின் உருவம் பொறித்த சிறப்பு நாணயம்..!

On January 17, 2019
pic
Share

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின், பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை, முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிடுகிறார்.

எம்.ஜி.ஆரின், 102வது பிறந்த தினத்தை ஒட்டி, தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வளாகத்தில் உள்ள, அவரது சிலைக்கு கீழ், அலங்கரித்து வைக்கப்படும் உருவப்படத்திற்கு, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர், மரியாதை செலுத்துகின்றனர்.

மேலும், எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நினைவாக, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயம் வெளியிடப்படுகிறது.

முன்னதாக, எம்.ஜி.ஆர் உருவம் பொதித்த ரூ.100 மற்றும் ரூ.5 நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை போற்றும் வகையில் நாணயங்களை வெளியிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.