முதன்முறையாக தமிழ் தெரியாத நடிகையுடன் நடித்தது ஒரு நல்ல அனுபவம் : நடிகர் அதர்வா

அதர்வாவுக்கு நாளை பிறந்தநாள். அவர் முதன்முறையாக போலீசாக நடித்து இருக்கும் 100 படம் வரும் வாரம் வெளியாக இருக்கிறது. இதையொட்டி அவர் அளித்த பேட்டி:-
நீங்களும் காக்கி உடை அணிந்து விட்டீர்களா?
எல்லா ஹீரோக்களுக்கும் போலீஸ் கதையில் நடிக்கும் ஆசை இருக்கும். ஆனால் எனக்கு அதற்கான சரியான கதை அமையவில்லை. சாம் ஆண்டன் 100 கதையை சொன்னபோதே விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இருந்தது. எனக்கு உண்மையிலேயே இது வித்தியாசமான கேரக்டர். 100 படம் என்னால் மறக்க முடியாத படமாக இருக்கும்.
போலீசாக நடிக்க தயாரானது எப்படி?
போலீஸ் வேடத்தில் நடிக்கும்போது மற்றவர்களுக்கு என் மீது நம்பிக்கை வருவதற்கு முன்பு எனக்கு நம்பிக்கை வரவேண்டும். அதற்காக வொர்க் அவுட் செய்து பிட் ஆனேன்.
உண்மை சம்பவங்கள் அடங்கிய கதையா?
சில உண்மை சம்பவங்கள் கதையில் இருக்கும். அவற்றை வைத்து கமர்சியலான படமாக கொடுத்து இருக்கிறோம்.
ஹன்சிகாவுடன் நடித்த அனுபவம்?
அவர் ஒரு கால் சென்டரில் பணிபுரிவார். போலீசாக முயற்சி செய்துகொண்டு இருக்கும் நான் அவரை கிண்டல் செய்வேன். கடைசியில் நானே போலீஸ் துறையில் அதுபோன்ற ஒரு வேலையில் சேர்வேன். அது சுவாரசியமாக இருக்கும். கிளைமாக்ஸ் காட்சியில் ஹன்சிகாவுக்கு மிகவும் முக்கியத்துவம் இருக்கும். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. முதன் முறையாக சுத்தமாக தமிழ் தெரியாத ஒரு நடிகையுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
