Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இத்தனை வருட காலத்தில் நான் இதுவரை நடிக்காத கேரக்டர் இது - நடிகை சச்சு..!

On May 7, 2019
sachu
Share
'கிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ்' சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் 'பேரழகி ஐ.எஸ்.ஓ'.  'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா'  ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை  கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சீனியர் நடிகை சச்சு இந்தப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சச்சு கூறியதாவது,
“எம்.ஜி.ஆர் - சிவாஜி காலம்தொட்டு கிட்டத்தட்ட ஐந்து தலைமுறையாக சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.. இப்போதுள்ள இயக்குனர்கள் எனக்கென்று ஒரு கதாபாத்திரம் இருப்பதாக கூறி என்னை அழைப்பதையே மிக பெருமையாக நினைக்கிறேன். இப்போதைய கலைஞர்கள் எங்களுக்காக என எதையும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் நான் அவர்களுக்கு ஏற்றாற்போல் என்னை மாற்றிக்கொள்கிறேன்.
அதனால் தான் இந்த படத்தில் ஒரு புதுவிதமான கதாபாத்திரம் என்றதும் என்னால் எளிதில் ஒப்புக்கொள்ள முடிந்தது. இத்தனை வருட காலத்தில் நான் இதுவரை நடிக்காத கேரக்டர் இது. வயதானாலும் கூட பியூட்டி பார்லர் சென்று தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் இந்த கதாபாத்திரம் போன்றே இப்போதும் கூட நிஜத்தில் நிறைய பெண்களை பார்த்திருக்கிறேன். அதைத்தான் இந்தப்படத்தில் பிரதிபலித்திருக்கிறேன்.
பெண்கள் எந்த வயதில் இருந்தாலும் தங்கள் அழகை பேணிக்காப்பதில் அக்கறை காட்டவேண்டும். அதற்கு பியூட்டி பார்லர் தான் போக வேண்டுமென கட்டாயமில்லை. இயற்கையான முறையிலேயே தங்களது அழகை வெளிப்படுத்தலாம். இந்த விஷயத்தில் அறிவியல் தொழில்நுட்பத்தை எங்கே எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என ஒரு வரைமுறை இருக்கிறது.
சில தவறான இடங்களில் அதை பயன்படுத்தும் போது ஏற்படும் பின்விளைவுகள் என்ன அதன் பிரச்சனைகள் என்ன என்பதை தான் இந்த பேரழகி ‘ஐ எஸ் ஓ’ படத்தில் முக்கியமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜயன். அறிவியல் கதை என்றாலும் அதை சீரியசாக இல்லாமல் நகைச்சுவை கலந்து ஒரு பாட்டி பேத்தியின் கதையாக அனைவரும் பார்க்கும் விதமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் விஜயன்” என்கிறார் சச்சு.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.