Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மீண்டும் தமிழில் நடிக்கும் துல்கர் சல்மான்

On June 13, 2017
thulkar
Share
thulkar மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான்,இவர் தமிழில் 'வாயை மூடி பேசவும்'படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார்.இவர் நடித்த முதல் படம் சற்று தோல்வி அடைந்த்து. பிறகு 'ஓ காதல் கண்மணி'படம் துல்கர் சல்மானுக்கு வெற்றியை தேடிதந்த்து திரையில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படம் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.அதன் பிறகு வேறு எந்த தமிழ் படங்களிலும் அவர் நடிக்கவில்லை. நடிகை சாவித்ரி வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக உள்ள படத்திலும் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு அடுத்து, அறிமுக இயக்குனர் ரா.கார்த்திக் இயக்கத்தில் தமிழ்,மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாக உள்ள படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.இப்படத்தில் நான்கு கதாநாயகி நடிக்க உள்ளார்களாம்.அதற்கான தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இப்படத்தை ஒருநாள் கூத்து படத்தை தயாரித்த கெனன்யா பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.விரைவில் துல்கர் சல்மான் நடிக்கும் படத்தை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.