மீண்டும் தனுஷுடன் ரோபோ சங்கர்

டைரக்டர் பாலாஜி மோகன், மலையாள நடிகர் துல்கர் சல்மானை வைத்து இயக்கிய வாயை மூடி பேசவும் படத்தில் தான் ரோபோ சங்கரை காமெடியனாக நடிக்க வைத்தார். அதற்கு முன்பு யாருமே கொடுக்காத அளவுக்கு அவருக்கு வெயிட்டான காமெடியன் ரோல் கொடுத்தார். அதில் ரோபோ சங்கரும் பெரிய அளவில் ஸ்கோர் பண்ணியிருந்தார். அதையடுத்து தனுஷை நாயகனாக வைத்து தான் இயக்கிய மாரி படத்திலும் படம் முழுக்க தனுசுடன் வருவது போன்ற வேடத்தில் ரோபோ சங்கரை நடிக்க வைத்தார் பாலாஜி மோகன். இந்த நிலையில், தற்போது மாரி-2 படத்தை இயக்க தயாராகி விட்ட பாலாஜிமோகன், அந்த படத்தின் பிரி புரொடக்சன்ஸ் வேலைகளை தொடங்கி விட்டார். அதோடு, படத்திற்கான நடிகர் நடிகைகளையும் தேர்வு செய்து வரும் அவர், முதல் நபராக ரோபோ ஷங்கரை தேர்வு செய்துள்ளார்.
அதோடு, மாரி படத்தை போலவே இந்த படத்திலும் தனுஷின் நண்பராக நடிக்கும் ரோபோ சங்கருக்கு அதிக காமெடி காட்சிகளை கொடுக்கப்போகிறாராம். மாரியில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்த நிலையில், இரண்டாவது பாகத்திலும் அவர்தான் நடிப்பார் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் இப்போது கேட்டால், கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சில முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது என்கிறார்கள்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postகர்நாடக முன்னாள் முதல்வர் மரணம்!
Next Postபரோலில் வருவாரா சசிகலா?
