மிகுந்த வரவேற்ப்பை பெற்றப்படம்....

தமிழ் சினிமாவில் வாரம் வாரம் படங்கள் வெளியாகிறது. அதில் எல்லா படங்களும் சிறந்த படங்கள் ஆவதில்லை, சில படங்கள் நம் மனதுக்கு மிக நெருங்கிய படமாக இருக்கும். ஒரு சிலருக்கு காதல் படம், ஒரு சிலருக்கு இசை, இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு விதம் பிடிக்கும். ஆனால் சினிமா ரசிகர்களுக்கு வெரைட்டி இருக்கணும் அப்புறம் புதுமை இருக்கணும், அப்படி பட்ட ஒரு படம் நீண்ட இடைவெளிக்கு பின் வந்துள்ளது என்று சொன்னால் அது மரகதநாணயம் படம் என்று தான் சொல்லணும். புதுமையான கதை வித்தியாசமான திரைகதை அருமையான காமெடி சலிக்காத காட்சிகள் கனகச்சிதமான நடிகர் நடிகை இப்படி எல்லாம் அமைந்துள்ள படம் தான் இந்த மரகதநாணயம்.
இப்படத்தில் ஆதி, நிக்கி கல் ராணி, ராமதாஸ், அருண்ராஜா காமராஜ், கோட்ட சீனிவாச ராவ், எம் எஸ்.பாஸ்கர், மைம் கோபி நடித்துள்ளனர். படத்தின் வெளியீட்டிற்கு முன்பாகவே பத்திரிக்கையாளர்களுக்கு என்று பிரத்தியேக காட்சி திரையிடப்பட்டது. பின்னர் இந்த மரகதநாணயம் திரைப்படம் பற்றி பாசிட்டிவான பேச்சு பத்திரிக்கையாளர்கள் மட்டுமின்றி திரையுலகினர்,மற்றும் திரையரங்கு விநியோகஸ்தர்கள் மத்தியிலும் பேசப்பட்டது. இந்த பாசிடிவான பேச்சின் விளைவாகத்தான் இந்த மரகதநாணயம் திரைப்படம் தமிழ்நாட்டில் 240 திரையரங்கிலும், கர்னாடகாவில் -28 திரையரங்கிலும், வட இந்தியாவில் - 5, எப்எமஎஸ்(FMS) - 35, தெலுங்கு பதிப்பு - 270 ஆக மொத்தம் 578 திரையரங்கில் இப்படம் இன்று வெளியாகியுள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
