பொன் ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவக்கம்...

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகர்த்திகேயன் நடித்துள்ள "வேலைக்காரன்" படபிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து பொன்.ராம் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் சிவகார்த்திகேயன்.
சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், ராஜேந்திரன், மனோபாலா மற்றும் யோகிபாபு ஆகியோர் சிவகார்த்திகேயனோடு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். இப்படத்துக்காக சிலம்பக் கலையை கற்றுக் கொண்டுள்ளார் சமந்தா.
இசை - இமான், ஒளிப்பதிவு - பாலசுப்பிரமணியம், எடிட்டிங் - விவேக் ஹர்ஷன், பாடல்கள் - யுகபாரதி, கலை இயக்குநர் - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு, கிராபிக்ஸ் - கமலக்கண்ணன், உடைகள் வடிவமைப்பு - அனு பார்த்தசாரதி மற்றும் எகா லக்கானி ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். 24 ஏ.எம் நிறுவனம் சார்பில் ராஜா தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது. படத்தின் காட்சிகள் 30 நாட்கள் தொடர்ந்து தென்காசியை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக 3 பாடல்களை முடித்துக் கொடுத்துள்ளார் இமான்.
இயக்குனர் பொன் ராமின் படத்தை தொடர்ந்து "இன்று நேற்று நாளை" படத்தின் இயக்குனர் படத்தில் நடிப்பதற்கும் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன். Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஇன்றுமுதல் தமிழில் "புலிமுருகன்"
Next Postமிகுந்த வரவேற்ப்பை பெற்றப்படம்....
