Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

"மாநகரம்" தயாரிக்கிறது "மாயா" நிறுவனம்:

On February 23, 2016
Maanagaram Movie
Share
Maanagaram Movie “மாயா” மாபெரும் வெற்றிப்படத்தை தொடர்ந்து பொட்டான்சியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதியபடம் “மாநகரம்” புதியபாணி கதையை மக்கள் ரசனைக்கேற்ப வித்தியாசமாக புதியவர்களால் சரியான விகிதத்தில் கொடுத்தால், அதை மக்கள் வரவேற்பார்கள் என்பதை “மாயா” நிரூபித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஐதராபாத் போன்ற இடங்களில் வசூல் சாதனை செய்துள்ளது. ஆர்பாட்டம் இல்லாமல் தனது முதல் இன்னிங்சை இப்படம் மூலம் தமிழ் திரை உலகில் கால்பதித்துள்ளது பொட்டான்சியல் ஸ்டுடியோஸ். "மாயா" படத்தை தொடர்ந்து இந்நிறுவனம் இரண்டாவது படைப்பாக “மாநகர​ம்​” என பெயரிடப்பட்டுள்ள படத்தை ஆரம்பித்துள்ளது. வெவ்வேறு ஊர்களில் இருந்து நான்கு பேர் பிரமிப்போடு பார்க்கும் சென்னை போன்ற மாநகரத்திற்கு வேலை தேடி செல்கிறார்கள். நான்கு பேரும் மாநகரத்தை எப்படி பார்க்கிறார்கள், அவர்களின் எதிர்ப்பார்ப்பை அந்த மாநகரம் எப்படி உடைத்தெரிகிறது, அவர்களை எப்படி நடத்துகிறது என்பதே “மாநகரம்” இந்த நான்கு பேர் கதையிலும் ஓர் உள்தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். அப்படி ஒரு “ஹைபர்லிங்” என்னும் புதுவித திரைக்கதையை த்ரில்லிங்காக அமைத்துள்ளார் குறும்பட இயக்குனரான இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அந்த நான்கு பேராக ஸ்ரீ, சந்தீப் இஷன், சார்லி, ராமதாஸ் நடிக்கிறார்கள். நாயகியாக ரெஜினா நடிக்கிறார். படத்தில் நாயகிக்கு கதையோடு ஒன்றி பயணிக்கும் வகையிலான நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளது. படத்தின் ஒளிப்பதிவை செல்வகுமார் செய்ய, இசையை ஜாவித் மேற்கொள்ள, ஸ்டான்ட் காட்சிகளை இரட்டையர்கள் அன்பறிவு அமைகின்றனர். பொட்டான்சியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. வருவதாக இப்படத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.