Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

"கபாலி தோட்டம்" அட, நம்ம புரட்சி தலைவர் பேரன் நடிக்கிறார்.....

On February 23, 2016
Kabali Thottam Movie Launch
Share
Kabali Thottam Movie Launch திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசாமி பிக்சர்ஸ் மற்றும் ட்ரான்ஸ் லிங்க் மீடியா T.K.ராஜேந்திரன் இணைந்து தயாரிக்கும் படம்-கபாலி தோட்டம். இந்தப்படத்தில் கதையின் நாயகர்களாக புதுமுகம் விக்கி மற்றும் புரட்சி தலைவர் எம் .ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் இருவரும் நடிக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் அனிஷா நடிக்கும் இந்தப் படத்தில் கோலிசோடா வில்லன் மது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தவிர,கே,ராஜன், ரோபோ சங்கர், தில்லி, ஆர்.முகுந்தன், தாஸ் பாண்டியன், சுமலதா, ராதா, அருண்பாண்டியன், தஞ்சை தமிழ் பித்தன், பா.கி, P.K.இளமாறன், நெல்லை சிவா,சிசர் மனோகர், முத்துக்காளை மற்றும் பலர் நடிக்கிறார்கள் இந்தப்படத்திற்கான தொடக்கவிழா நேற்று, சென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடந்தது. இயக்குனர் பேரரசு, இயக்குனர் சமுத்திரக்கனி, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் சவுந்தர்ராஜா, சித்ரா லட்சுமணன் மற்றும் பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். T.R.பாஸ்கர் எழுதி இயக்கம் இந்தப்படத்திற்கு யு.கே.முரளி இசையமைக்க பிரியன் பாடல்களை எழுதுகிறார். “தீயதைத் தீயிட வருவான்" என்பதுதான் படத்தின் ஒன்லைன். சென்னையில் நடந்த உண்மைக் கதையை வைத்து எடுக்கவிருக்கிற கமர்ஷியல் படம்தான் இது.” என இப்படத்தின் இயக்குனர் பாஸ்கர் தெரிவித்துள்ளார். மொத்தப் படமும் சென்னையில் படமாக்கவிருக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.