Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மலேசியாவில் எந்த ஒரு மதம் சார்ந்த விழாவிலும் நான் பங்கேற்கவில்லை - நடிகர் சூர்யா விளக்கம்:

On May 20, 2016
Suriya
Share
Suriya மலேசியாவில் எந்த ஒரு மத சார்ந்த விழாவிலும் நான் பங்கேற்கவில்லை. நடிகர் சூர்யா அவர்களின் வேண்டுகோள் மற்றும் விளக்கம். வணக்கம். மலேஷியாவில் ஒரு மதப்பிரிவை சார்ந்த ஒரு விழா நிகழ்த்துவதாகவும் அதில் நான் பங்கு பெற போவதாகவும் செய்தியை வெளியிட்டுள்ளனர். மேலும் அதில். பங்குபெற ஒரு தொகையினை கேட்டதாகவும் கூறியுள்ளனர். இது முற்றிலும் தவறான செய்தி. கலைத்துறையில் சம்பந்தமுடையவர்கள் எந்த வித ஜாதி மத ,வேறு அமெப்புகளுக்கு அப்பாற்பட்டவர்கள. அந்த சிறந்த வழியிலியே தான் நானும் உள்ளேன். ஆதலால் என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் இந்த மாதிரி செய்திகளை நம்பவேண்டாம. இது குறித்து தீர விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளிடம் வேண்டுகோளும் விடுத்துள்ளேன். என் மீது நல்ல மதிப்பு வைத்த உங்கள் வாழ்த்மிக்களுடன் என் சேவைகளை தொடர விரும்புகிறேன். இது போன்ற செய்திகள் அடிக்கடி வருவது வேதனையை தருகிறது. இனியும் இப்படி என் பெயரை தவறாக பயன்படுத்தினால் சட்டபூர்வமாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.ஆக இது போன்ற செய்தகளை நம்பாமல் தொடர்ந்து என் நல்ல செயல்களுக்கு தொடர்ந்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். Suriya Statement

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.