Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மனநல மருத்துவராக நடிக்கும் அர்ஜூன்

On January 27, 2018
arjun
Share
arjun நிபுணன் படத்திற்கு பிறகு சொல்லிவிடவா படத்தை இயக்கி வந்த அர்ஜூன், விஷாலின் இரும்புத்திரையில் வில்லனாக நடித்துள்ளார். இதையடுத்து தெலுங்கில் வக்கந்தம் வம்சி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள, நா பேரு சூர்யா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திலும் அர்ஜூன் வில்லனாக நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில், பின்னர் அந்த செய்தி மறுக்கப்பட்டது.அதோடு, நா பேரு சூர்யா படத்தில் அல்லு அர்ஜூனின் அப்பாவாக நடிப்பதாக கூறப்பட்டது. அதையடுத்து தற்போது அப்படத்தில் அர்ஜூன் ஒரு மனநல மருத்துவராக நடிப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வழக்கமான அப்பாவாக இல்லாமல் மாறுபட்ட அப்பாவாக கிட்டத்தட்ட கதையில் இன்னொரு ஹீரோ என்கிற அளவுக்கு அர்ஜூனின் வேடம் இடம்பெற்றிருப்பதாக இயக்குனர் வக்கந்தம் வம்சி தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.