Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு:"பத்மாவத்" திரைப்படத்திற்கு எதிர்ப்பு..

On January 28, 2018
padma14
Share
padma14 வட மாநிலங்களில் ‘பத்மாவத்’ படத்துக்கு எதிர்ப்பு இருப்பதால், சென்னையிலும் இந்த படம் திரையிடப்பட்ட தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், மராட்டிய மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் பகுதியில் அமைந்துள்ள பானுசாகர் தியேட்டரில் பத்மாவத் திரைப்படம் வெளியானது. அந்த தியேட்டரில் நேற்று மாலை பத்மாவத் திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல் தங்கள் கைகளில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை தியேட்டரின் வெளிப்புறத்தில் விசியது. இதைக்கண்ட தியேட்டர் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு சென்று பெட்ரோல் குண்டை கைப்பற்றினர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.