Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்தித்த தம்பிதுரை !

On November 15, 2017
seetharaman
Share
seetharaman மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று திடீரென சந்தித்து பேசியிருந்தார். தமிழக முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் பாஜகவினரைப் போல டெல்லிக்கு எந்த நேரத்திலும் சென்று மத்திய அமைச்சர்களைப் பார்த்து பேசி வருகின்றனர். பிரதமர் மோடி உள்ளிட்டோரையும் எளிதில் சந்திக்கின்றனர். ஆனால் தமிழக நலனுக்கு விரோதமான திட்டங்களே திணிக்கப்படுகின்றன. ஆகையால் ஆளும் அதிமுக, பாஜகவின் நிழலாக செயல்படுகிறது என்பது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு. இந்த நிலையில் கடந்த ஒருவார காலமாக சசிகலா குடும்பத்தினரை வருமான வரித்துறை வளைத்து பிடித்துள்ளது. அத்துடன் டெல்லிக்கு ஆதரவாக நிலைப்பாடு மேற்கொண்ட போதும் தங்கள் மீது வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது ஏன்? என சசிகலா தரப்பு சீறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை லோக்சபா துணை சபாநாயகர் நேற்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது தற்போதைய தமிழக நிலவரம் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.