இந்தி பேசாததால் துப்பாக்கிச் சூடு! இந்திய கடற்படை! ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஸ்டிரைக்!

இந்தி பேசாததால் துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இந்திய கடலோர காவல்படையினர் அவர்களை துரத்தியுள்ளனர். அப்போது தமிழில் மீனவர்கள் பேசியுள்ளனர்.
ஆனால் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என கூறியுள்ளனர் கடற்படையினர். அப்போது திடீரென கடற்படையைச் சேர்ந்த ஒருவர் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஜான்சன், பிச்சை ஆகிய மீனவர்கள் படுகாயமடைந்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடக்கவில்லை என்கிறது கடற்படை.
இந்திய கடற்படையின் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபடுகின்றனர். ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பாக நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
