Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மதுபான விலை5% உயர்வு , பேரவையில் சட்டதிருத்த மசோதா தாக்கல்..

On March 23, 2017
drinks
Share
drinks தமிழக சட்டமன்றத்தில் மதுபான விலையை 5% உயர்த்துவதற்கான சட்டதிருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.இது குறித்து விரிவான விளக்கங்கள் அவற்றில் குறிபிடப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் வீரமணி, மாநிலத்தின் வருவாயை பெருக்கும் வகையில், மதுபானங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். மதுபானங்களுக்கு 5% வரை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து அதுதொடர்பான மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு நிறைவேற்றப்பட்டால் அனைத்து மதுபானங்களின் விலையும் உயரும். வரும் ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நாடு முழுவதும் அமலாக இருக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.