கேரளாவில் அதிசயம் 12 வயது சிறுவன் அப்பாவாகியுள்ளார்!

கேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், 12 வயது சிறுவனுக்கும் குழந்தை பிறந்துள்ளது. இதன்மூலம் இவர் இந்தியாவின் இளம் தந்தையாக இருக்கக்கூடும்.
எர்ணாகுளத்தில் ஒரு மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்னால் 16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.
பாலியல் கொடுமைகளில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் (POCSO) சட்ட விதிகளின் அடிப்படையில் அவர்களைப் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. குழந்தை மற்றும் தந்தையின் மரபணுப் பரிசோதனைக்குப் பிறகே, இச்சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரியின் உட்சுரப்பியல் துறைத் தலைவரும், பேராசிரியருமான பி.கே.ஜப்பார் இதுகுறித்துக் கூறும்போது, ''இளம் வயதிலேயே தந்தையாகியுள்ள சிறுவன் உரிய வயதுக்கு முன்பே பருவமடைந்திருக்கலாம்.
இது வழக்கத்துக்கு மாறான நிலை அல்ல. ஆனால் 12 வயதில் ஒரு சிறுவன் தந்தையான சம்பவத்தை இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை'' என்றார். குழந்தை பிறந்து 18 நாட்கள் ஆகியிருந்தபோது, தந்தைக்கும், குழந்தைக்கும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்களின் டிஎன்ஏ மூலக்கூறுகளைக் கொண்டு தந்தைமை பரிசோதிக்கப்பட்டது. அதில் அவர்தான் குழந்தையின் தந்தை என உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தந்தையாகியுள்ள சிறுவன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தாய் மற்றும் தந்தை 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பதால், வழக்கில் சட்டரீதியாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
