Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மண் சாலை பந்தயத்தை மையப்படுத்தும் மட்டி திரைப்படம்

On March 1, 2021
Muddy
Share

இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்தி "மட்டி" (Muddy) என்ற படத்தை எடுத்திருக்கிறார்கள். புதுமுக இயக்குனரான டாக்டர் பிரகபல் இப்படத்தை இயக்கியுள்ளார்.
பிரேமா கிருஷ்ணதாசின் 'பிகே7 கிரியேஷன்ஸ்' என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. யுவன் மற்றும் ரிதான் கிருஷ்ணா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது .

இயக்குநர் பிரகபல் பேசும்போது,

"எல்லோருக்கும் வணக்கம். இந்த அழைப்பை ஏற்று வந்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன், புரொடக்‌ஷன் போஸ்ட், புரொடக்‌ஷ்ன என மூன்று ஸ்டேஜ்களிலும் நிறைய வேலை இருந்தது. மேலும் படம் நல்லா வந்ததிருக்கிறது என்றால் அதற்கு பின்னால் நிறைய சவால்கள் இருந்தன. இது என்னோட பர்ஸ்ட் ப்ராஜெக்ட் . ரொம்ப எதிர்பார்ப்போட இருக்கேன். நீங்கள் நல்ல சப்போர்ட் செய்து படத்தை வெற்றிபெற செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன். படத்தின் நடிகர்கள், எடிட்டர், டயலாக் ரைட்டர், மியூசிக் டைரக்டர், சினிமாட்டோகிராபர், vfx டீம் என எல்லோரும் ரொம்ப நல்லா வொர்க் பண்ணிருக்காங்க..அனைவருக்கும் நன்றி" என்று பேசினார்.

டயலாக் ரைட்டர் RP பாலா பேசும்போது,

"எல்லாருக்கும் வணக்கம். இந்தபப்டத்திற்கு வாய்ப்பு தந்த கார்த்திக் அண்ணாவுக்கு நன்றி. இயக்குநரை முதலில் சந்தித்த போது ரா புட்டேஜை காட்டினார். நான்கு வருடம் கஷ்டப்பட்டு இந்தப் புராஜெக்டை உருவாக்கி இருக்கிறார்கள். எடிட்டர் ஜான் லோகேஷ் 'ராட்சசன்' படத்தில் மிரட்டி இருந்தார். அந்தப் படத்தை விட இந்தப்படத்தில் அதிகமாக உழைத்திருக்கிறார். கேஜிஎப் மியூசிக் டைரக்டர் மிரட்டி இருக்கிறார். ட்ரைலர் எந்தளவுக்கு பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கோ..அதே பிரமிப்பு படத்திலும் இருக்கிறது" என்றார்

நடிகர் அஜித் கோஷி பேசியதாவது,
"எனக்கு இது மாலிவுட்ல பர்ஸ்ட் படம். நான் படத்தில் சின்ன ரோல் தான் பண்ணிருக்கேன். இந்த கேரக்டரை இயக்குநர் ஒரு மானிட்டரில் ப்ரீப்பா காட்டினார். அதனால் படத்தில் என் கேரக்டருக்காக நன்றாக தயாராக முடிந்தது. எல்லோரும் நன்றாக சப்போர்ட் செய்யுங்க. நன்றி" என்றார்.

எடிட்டர் சான் லோகேஷ் கூறும்போது,

"மட்டி எனக்கு ரொம்ப பிடிச்ச படம். ராட்சசன் படம் முடித்த பின் எனக்கு மாலிவுட்ல இருந்து எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. எதை ஓ.கே செய்வது என்ற யோசனையில் இருந்தேன். இயக்குநர் மட்டி படத்தின் கதையைச் சொன்னபோது எனக்கு அந்த கான்செப்ட் ரொம்ப பிடித்தது. இந்தப்படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்றேன். அப்போது ஷுட் செய்த புட்டேஜை காட்டினார்கள். இந்தப்படம் ரொம்ப சேலஞ்சாக இருக்கும் என்று நினைத்தேன். வொர்க் பண்ணவும் ரொம்ப இன்ட்ரெஸ்டாக இருந்தது. படம் நன்றாக வந்திருக்கிறது. 5 மொழியில் படம் வந்திருக்கிறது. கண்டிப்பா படம் எல்லோருக்கும் புடிக்கும்னு நம்புறேன்" என்று கூறினார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.