எமோஷனல் த்ரில்லரான மோகன்தாஸ் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடக்கம்

விஷ்ணு விஷால் நடிக்கும் எமோஷனல் த்ரில்லர் பாணியில் உருவாகும் "மோகன்தாஸ்" படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.
வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து, தமிழ்த் திரையுலகில் தன்னை நிலை நிறுத்தியவர் விஷ்ணு விஷால். தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எஃப்.ஐ.ஆர்' படத்தில் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ளார்.
'எஃப்.ஐ.ஆர்' படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார் விஷ்ணு விஷால். இதையும் தனது 'விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்' மூலமாக தயாரிக்கவுள்ளார்.
'மோகன்தாஸ்' படத்தை 'களவு' படத்தின் இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கவுள்ளார்.
இதில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கவுள்ளார். நாயகியாக கலைமாமணி விருது பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். இந்தப் படம் ஒரு எமோஷனல் த்ரில்லர் பாணியிலான கதையாகும்.
வித்தியாசமான கதைகள் வந்தால் தமிழில் நடிக்கும் இந்திரஜித் சுகுமாரன், இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன்பூர்ணிமா பாக்யராஜ், கருணாகரன், அக்ஷய் ராதாகிருஷ்ணன், ஷாரிக், லாலு, பிரகாஷ் ராகவன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.
இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 'மோகன் தாஸ்' படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள விஷ்ணு விஷாலுக்கு அவருடைய திரையுலக நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 'களவு' படத்தில் தன்னுடைய பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களுடனே இந்தப் படத்திலும் பணிபுரியவுள்ளார் முரளி கார்த்திக்.
த்ரில்லர் படங்களின் ரசிகர்களுக்கு விரைவில் ஒரு அறுசுவை விருந்து காத்திருக்கிறது என்று நம்பலாம்.
'மோகன்தாஸ்' படக்குழுவினர் விவரம்
கதை, திரைக்கதை இயக்கம்: முரளி கார்த்திக்
தயாரிப்பு நிறுவனம்: வி.வி ஸ்டுடியோஸ்
தயாரிப்பாளர்: விஷ்ணு விஷால்
ஒளிப்பதிவாளர்: விக்னேஷ் ராஜகோபாலன்
இசை: சுந்தரமூர்த்தி கே.எஸ்
வசனங்கள்: அரவிந்த் முரளி, முரளி கார்த்திக்
சண்டைக் காட்சிகள் வடிவமைப்பு: அன்பறிவ்
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
