Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மகேஷ் பாபு நடிக்கும் 'ஸ்பைடர்' படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு

On August 1, 2017
spi
Share
spi ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் 'ஸ்பைடர்' படம் செப்டம்பர் மாதம் 27ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் முதல் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளார்கள். https://youtu.be/hPqsHikZGbE படத்தின் டைட்டில் பாடலான 'பூம் பூம்' என்ற அந்தப் பாடலை நிகிதா பாடியுள்ளார். இதன் சிறு வீடியோ முன்னோட்டத்தை நேற்று வெளியிட்டார்கள். அதில் மிகவும் ஸ்டைலிஷான மகேஷ் பாபுவின் தோற்றம் அவருடைய ரசிகர்களை மிகவும் கவர்ந்துவிட்டது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக நடிக்கும் மகேஷ் பாபுவிற்கு இந்தப் படம் தமிழில் நேரடி அறிமுகப் படம். அது மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அவரை வேறு ஒரு தளத்திற்கு இந்தப் படம் கொண்டு செல்லும் என அவருடைய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.