Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பெரா வழக்கு வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: டிடிவி தினகரன்!

On March 22, 2017
ttv-dinakaran
Share
ttv-dinakaran அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீதான வரி ஏய்ப்பு வழக்கின் (ஃபெரா வழக்கு) விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு சென்னை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து கடந்த 1994ஆம் ஆண்டு லண்டனில் இருந்து ‘லெக்சஸ்’ என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தனர். அந்த காரை பழைய கார் என்று கூறி ஏமாற்றி இறக்குமதி செய்ததால், ஒரு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இருவருக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் இருவரும் விடுவிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து அமலாக்கத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் இருவரையும் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக மார்ச் 17, 2017 அன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி, டிடிவி தினகரன் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். சசிகலா பெங்களூரு சிறையில் இருப்பதால் ஆஜராக வரவில்லை.கடந்த 17-ம் தேதி இந்த வழக்கு நீதிபதி மலர்வதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணையை மார்ச் 22ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் அன்று தினகரன் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்தநிலையில் இன்று நீதிமன்றத்தில் தினகரன் ஆஜராவார் என ஏதிபார்க்கபட்டநிலையில் அவர் ஆஜராக வில்லை. இதனையடுத்து தினகரனின் தரப் வாதத்தை கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் மீதான விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.