அதிக திரையரங்குகளில் வெளியாகும் 'வீரம்' ரீமேக் 'கட்டமராயுடு' !..

பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் 'கட்டமராயுடு' படத்துக்கு தமிழகத்தில் அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளது.சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'வீரம்'. இதன் தெலுங்கு ரீமேக் உரிமையை கைப்பற்றி நாயகனாக நடித்துள்ளார் பவன் கல்யாண்.
'கட்டமராயுடு' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்துள்ளார். மார்ச் 24-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தெலுங்கு திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், தமிழகத்திலும் 'கட்டமராயுடு' படத்துக்கு அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளன. எப்போதுமே தெலுங்கு படங்கள் என்றால், சென்னையில் மட்டுமே அதிக திரையரங்குகளில் வெளியாகும். ஆனால், இப்படத்துக்கு திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் திரையரங்குகள் கொடுத்துள்ளார்கள்.
அஜித் ரசிகர்களும் இப்படத்துக்கு தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளது தான் இதற்குக் காரணம் என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.'கட்டமராயுடு' படத்தைத் தொடர்ந்து, த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் பவன் கல்யாண். இப்படத்தை அஜித் ரசிகர்களும் எதிர் பார்த்து காத்திருகின்றனர் ...
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
