Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பெரம்பலூர் அருகே கார்கள் மோதி கோர விபத்து..9 பேர் பலி !

On May 11, 2018
peramba
Share

பெரம்பலூர் அருகே நேற்று நள்ளிரவில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சொகுசு கார் ஒன்று, பெரம்பலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பில் மோதியது. சாலைத் தடுப்பில் மோதிய அந்த கார், அதையும் தாண்டி எதிர்த்திசையில், சென்னை-திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதியது.

இதில் விபத்தை ஏற்படுத்திய காரில் பயணித்த ஒருவர் மற்றும் எதிரே சென்ற காரில் பயணித்த 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலியாகியுள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.