Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பெண் துப்பறிவாளராக நடிகை திரிஷா: "குற்றப்பயிற்சி"

On February 2, 2018
Kuttrappayirchi
Share
Kuttrappayirchi ஸ்ரீ குருஜோதி பிலிம்ஸ் சார்பாக G. விவேகானந்தன் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் "குற்றப்பயிற்சி". தாரைத் தப்பட்டை படத்தில் இயக்குநர் பாலாவிடம் பணியாற்றிய வர்ணிக் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 1980 காலகட்டத்தின் பின்னணியில் நடக்கும்படி அமைக்கபட்டிருக்கும் இத்திரைப்படத்தில், பெண் துப்பறிவாளராக முதன்மை கதாபாத்திரம் ஏற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை திரிஷா. மேலும் இப்படத்தில் , சுரபி, சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஒரு உண்மைசம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் கதை ஒரு கொலையும், கொலையின் பின்னணியும் துப்புதுலக்கும் விதமாக விருவிருப்பான திரைக்கதை அமைத்து உருவாகியுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் படத்தின் முதன்மை கதாபாத்திரம் பெண் துப்பறிவாளராக நடிப்பது இதுவே முதல் முறை. முதல் இந்திய பெண் துப்பறிவாளரான ரஜினி பண்டித் அவர்களை உத்வேகமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. விவேகானந்தன் தயாரிப்பில் கதை, திரைக்கதை, வசனம்,வர்ணிக் எழுதி இயக்குகிறார். பாபு குமார் ஒளிப்பதிவில் மதன் படத்தொகுப்பு செய்கிறார். ரதன் இசையில் நடனப்பயிற்சி அளிக்கிறார் பாபா பாஸ்கர், கிஷோர் மற்றும் கலை பாலசந்தர் C.S புகைப்படம் வெங்கட்ராம் அவர்களால் பதிவிடப்படுகிறது. சண்டைப்பயிற்சி அளிக்கிறார் சுப்ரீம் சுந்தர், உடைகள் - அருண் குமார் மற்றும் உடைகள் வடிவமைகின்றனர் நிகிதா, வாசுகி பாஸ்கர் டிசைனர் யுவராஜ் மக்கள் தொடர்பு நிகில் இவர்களுடன் தயாரிப்பு மேற்பார்வையிடுகிறார் சஷி T.V

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.