Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

"சந்திரமௌலி" படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர் சங்க தலைவர்..

On February 2, 2018
regina-cassandra-gautham-karthik-mr-chandramouli_640x480_71517380468
Share
regina-cassandra-gautham-karthik-mr-chandramouli_640x480_71517380468 கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசன்றா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மிக வேகமாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் 'Mr.சந்திரமௌலி' வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஒரு முக்கியமான குத்துச்சண்டை காட்சியை சமீபத்தில் படமாக்கியுள்ளனர். தொடர்ந்து 18 மணி நேரம் நடந்துள்ள இந்த படப்பிடிப்பில் துளியும் சோர்வாகமல், முழு ஓத்துழைப்பையும் தந்து அசத்தியுள்ளார் கதாநாயகன் கவுதம் கார்த்திக். அவரது இந்த உழைப்பை 'Mr.சந்திரமௌலி' அணியும் இப்படத்தின் சண்டை இயக்குனர் 'ஸ்டண்ட்' சிவாவும் பாராட்டியுள்ளனர். இந்த குத்துசண்டை காட்சி இப்படத்தின் முக்கிய அம்சங்களின் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏப்ரல் 27 ரிலீசுக்கு 'Mr.சந்திரமௌலி' வேகமாக தயாராகிவருகிறது. 'Mr.சந்திரமௌலி' படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும் தென்னிந்தியா நடிகர் சங்கத்தின் செயலாளருமான திரு.விஷால் அவர்கள் வந்து படக்குழுவினரை சந்தித்து அவர்களது வேகமான மற்றும் சிறந்த பணியை பாராட்டியுள்ளார். திட்டமிட்டபடி படப்பிடிப்பை சிறப்பாக நடத்துவதும், ரிலீஸ் தேதியை தற்பொழுதே ஏப்ரல் 27 என அறிவித்திருப்பதும் இயக்குனர் திரு மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களது அருமையான திட்டமிடுதலுக்கு சான்றாகும் என விஷால் கூறியுள்ளார். இதே போல் தமிழ் சினிமாவின் மற்றவர்களும் சிறப்பாக திட்டமிடவேண்டும் எனவும் அவர் பாராட்டியுள்ளா.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.