Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

புயல் பாதித்த தமிழகத்திற்கு கேரள அரசு 10 கோடி நிதி உதவி : கமல்ஹாசன் வரவேற்பு..!

On November 29, 2018
2-14
Share
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.10 கோடி நிதி வழங்குவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இது குறித்து பினராயி விஜயன் ட்விட்டரில் தமிழில் கூறியுள்ளதாவது: கஜா புயலில் பாதிக்கப்பெட்ட தமிழக சகோதரர்களுக்கு கேரள மக்களின் ஆதரவை தெருவிக்கறோம். புதன் கிழமை சேர்ந்த அமைச்சரவை அவசர உதவியாக 10 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வழங்க முடிவு கொண்டோம். உணவ், துணி, ஆடைகள் உடப்பெட்ட 14 லாரி அவசர பொருட்கள் ஏற்கனவே அனுப்பி வய்த்தோம். ஆறு மருத்துவ குழுவும் கேரளா மின்சார வாரியத்தை சேர்ந்த 72 ஊழியர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தேவை என்றால் மேலும் உதவியை அனுப்பவுவோம் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவாதம் அளித்தோம். இவ்வாறு கேரள முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். தனது வேண்டுகோளை ஏற்று, பினராயி விஜயன், இந்த நிதி உதவியை அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார். ட்விட்டரில் கூறியுள்ளதாவது: கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு கேரள அரசு சார்பாக ரூபாய் 10 கோடியை அளித்தற்கு கேரள முதல்வர் அவர்களுக்கு நன்றி. வேண்டுகோள் வைத்த 24 மணி நேரத்திற்குள் துரிதமாக நடவடிக்கை எடுத்த உங்கள் செயல்பாடு மனிதத்தின் வெளிப்பாடு! என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.