Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இளம் நடிகை ரியாமிகா தூக்கு போட்டு தற்கொலை..!.

On November 29, 2018
riyamika-news
Share

தமிழில் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் என்கிற படத்தில் நடித்த இளம் நடிகை ரியாமிகா தற்கொலை செய்து கொண்டார்.

மன உளைச்சல் காரணமாக நடிகைகள் தற்கொலை செய்துகொள்வது அவ்வப்போது நடந்து வருகிறது. சென்னை வளசரவாக்கம், தேவி குப்பத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் நடிகை ரியாமிகா(26). இவர் தமிழில் "குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்" படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் தன்னுடைய தன்னுடைய தம்பியுடன் அந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை அவர் நீண்ட நேரமாகியும் அறையிலிருந்து வெளியே வரவில்லை. அவரது தம்பி மற்றும் காதலன் தினேஷ் ஆகியோர் கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை. ஜன்னல் வழியாக பார்த்த போது அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.