புதுக்கோட்டை மாவட்டம் அருகே கடல் உள்வங்கியதால் பரபரப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த கட்டுமாவடி மீன் பிடித்தளத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் தினமும் கடலில் மீன் பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடலுக்கு சென்று விட்டு கரைக்கு திரும்பிய மீனவர்கள் நாட்டுப்படகை கரையோரத்தில் நங்கூரம் போட்டு நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றனர்.
நேற்று காலை மீண்டும் கடலுக்கு செல்வதற்காக வந்த மீனவர்கள், கடல் திடீரென 200 மீட்டர் உள்வாங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கடல் உள்வாங்கியதால் பாசிகள், கடல் சிற்பிகள், சகதியுமாக காணப்பட்டது. படகுகளும் தரை தட்டி நின்றது.
பின்னர் மீனவர்கள் தங்களது படகை இழுத்து சென்று மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர். கட்டுமாவடி கடல்நீர் திடீரென உள்வாங்கியது மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
